அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Covid-19

எனது பணப் பரிமாற்றத்தை என்னால் பெற முடியாவிட்டால், எனது பணம் என்னவாகும்?

உங்கள் பரிமாற்றம் 30 நாட்களுக்குக் கிடைக்கும். இந்த நேரத்திற்குப் பிறகு, பரிமாற்றத்தை மறுதொடக்கம் செய்ய அல்லது பணத்தைத் திரும்பப்பெறுவதற்கான பரிமாற்றத்தை ரத்துசெய்ய உங்கள் அனுப்புநர் எங்கள் வாடிக்கையாளர் சேவையைத் தொடர்புகொள்ள வேண்டும்.

எனது வீட்டை விட்டு நான் வெளியேற முடியாவிட்டால் எனக்காக பணத்தைப் பெற யாரையாவது நான் அங்கீகரிக்க முடியுமா?

பாதுகாப்புக் காரணங்களுக்காக, நியமிக்கப்பட்ட பெறுநர் மட்டுமே பரிமாற்றத்தைப் பெற முடியும். இருப்பினும், அந்தப் பரிமாற்றத்தை ரத்துசெய்து புதிய ஒன்றைத் தொடங்க, எங்கள் வாடிக்கையாளர் சேவையைத் தொடர்புகொள்ளுமாறு உங்கள் அனுப்புநரிடம் கேட்கலாம். உங்கள் அனுப்புநர் ஆன்லைனில் நேரடியாக வங்கிக் கணக்கு அல்லது மொபைல் வாலெட்டுக்குப் பணப் பரிமாற்றம் செய்யலாம்.

இந்த நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு ஆதரவளிக்க Western Unionஎன்ன செய்கிறது?

உள்ளூர் விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்குக் கட்டுப்பட்டு, உலகம் முழுவதும் எங்கள் டிஜிட்டல் மற்றும் சில்லறை விற்பனைச் சேவைகளைச் செயல்பட வைப்பதே எங்கள் குறிக்கோள். ID சரிபார்ப்புச் செயல்முறையை விரைவுபடுத்துவதற்கான புதிய வழிகளைச் சேர்ப்பது மற்றும் சில நாடுகளில் ஹோம் டெலிவரி அம்சத்தை வழங்குவது போன்ற எங்கள் சேவைகளை நாங்கள் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறோம். எப்போதும் மாறிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில், COVID-19 காரணமாக உள்ளூர் கட்டுப்பாடுகளை எதிர்கொள்பவர்கள் westernunion.com ஐப் பார்வையிடவும் அல்லது எங்கள் மொபைல் செயலியைப் பயன்படுத்தி நேரடியாக வங்கிக் கணக்கு அல்லது டிஜிட்டல் வாலெட்டுக்குப் பணம் செலுத்துவதற்கான பரிமாற்றங்களை அனுப்பப் பரிந்துரைக்கிறோம். இந்தச் சேவை தற்போது 100க்கும் மேற்பட்ட நாடுகளில் கிடைக்கிறது.

Western Unionவணிகத்திற்குப் பயன்படக்கூடியதா?

 

ஆம், நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தொடர்ந்து சேவை செய்து வருகிறோம் மற்றும் உலகளவில் செயல்படுகிறோம். தற்போதைய சூழ்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளவர்கள் எங்கள் மொபைல் செயலி, அல்லது westernunion.com ஐப் பயன்படுத்தி பணம் அனுப்புமாறும் பெறுமாறும் ஊக்குவிக்கிறோம். அதிக அளவில் COVID-19 தொற்றுகள் உள்ள பகுதிகளில் உள்ள எங்கள் ஏஜெண்ட் இருப்பிடங்கள் தங்கள் வணிகங்களைத் தற்காலிகமாக மூடலாம் அல்லது செயல்படும் நேரத்தைப் புதுப்பித்திருக்கலாம். தற்போது செயல்படும் நேரத்திற்கு எங்கள் ஏஜெண்ட் லொக்கேட்டரைப் பார்க்கவும். சேவைகள் மற்றும் திறந்திருக்கும் நேரங்கள் இருப்பதை உறுதிப்படுத்த, வருகைக்கு முன் அழைப்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

காகிதப் பணத்தால் கொரோனா வைரஸ் பரவும் என்பது உண்மையா?

வேறு எந்த மேற்பரப்பையும் விட ரூபாய் நோட்டுகள் கொரோனா வைரஸ் போன்ற வைரஸ்களைப் பரப்புவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று நம்புவதற்கான எந்தக் காரணமும் இல்லை. கொரோனா வைரஸுக்கு எதிராக அடிப்படை சுகாதாரமே சிறந்த தற்காப்பு என்பது உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல் ஆகும்.

COVID-19 காரணமாக ஏஜெண்ட் இருப்பிடங்கள் எதுவும் திறக்கப்படாததால் என்னால் பணப் பரிமாற்றத்தை எடுக்க முடியவில்லை.

சிரமத்திற்கு வருந்துகிறோம். எப்போதும் மாறிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில், COVID-19 காரணமாக உள்ளூர் கட்டுப்பாடுகளை எதிர்கொள்பவர்கள் westernunion.com ஐப் பார்வையிடவும் அல்லது எங்கள் மொபைல் செயலியைப் பயன்படுத்தி நேரடியாக வங்கிக் கணக்கு அல்லது டிஜிட்டல் வாலெட்டுக்குப் பணம் செலுத்துவதற்கான பரிமாற்றங்களை அனுப்பப் பரிந்துரைக்கிறோம். 

மோசடியில் இருந்து என்னைப் பாதுகாத்துக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?

குறிப்பாக இந்த நேரத்தில், மோசடி மற்றும் ஃபிஷிங் ஆபத்து குறித்து எச்சரிக்கையாக இருக்கவும், பணம் அனுப்பும் போது கூடுதல் கவனத்துடன் இருக்கவும். கடன் அல்லது கிரெடிட் கார்டு கட்டணம், சுங்கம் அல்லது ஷிப்பிங் கட்டணங்களுக்காக பணத்தை அனுப்ப வேண்டாம். நீங்கள் நேரில் சந்தித்திராத எவருக்கும் பணம் அனுப்பாதீர்கள். சரிபார்க்கப்பட்ட தெருவின் முகவரி இல்லாத வணிகங்கள் மீது சந்தேகம் கொள்ளுங்கள். தனிநபர் ஒருவருக்கு ஒரு பொருள் அல்லது சேவைக்காகப் பணப்பரிமாற்றம் செய்ய வேண்டாம். தொண்டுக்காக பணத்தைப் பரிமாற்றம் செய்வது குறித்து சந்தேகம் கொள்ளுங்கள், பிரதிநிதியிடம் ஒரு ID கேட்கவும். உங்கள் நிதித் தகவலைப் பகிர்வதற்கு முன் இருமுறை யோசியுங்கள். மேலும் அறிய எங்கள் மோசடி விழிப்புணர்வுப் பக்கத்தைப் பார்வையிடவும் மற்றும் தற்போதைய கொரோனா வைரஸ் தொடர்பான ஆன்லைன் மோசடிகளைப் பார்க்கவும்.