மோசடியைப் புகாரளிக்கவும்
மோசடி செய்யும் ஒரு நபர் Western Union-ஐப் பயன்படுத்தி பணம் அனுப்பும்படி உங்களிடம் கேட்டிருந்தால், எங்களுக்குத் தெரியப்படுத்தவும்.
கீழே உள்ள உங்கள் நாட்டைத் தேர்ந்தெடுத்து, எங்கள் மோசடி ஹாட்லைனை அழைக்கவும்.
இதற்காக எங்களின் மோசடி ஹாட்லைனிற்கு அழைக்கவும்
நாங்கள் மோசடிப் போக்குகளைக் கண்டறிந்து, அதன் மூலம் பிறர் மோசடிகளில் சிக்காமல் இருக்க உதவுகிறோம்.
நீங்கள் சந்தேகத்திற்குரிய மின்னஞ்சலைப் பெற்றால், அதை எங்களுக்கு spoof@westernunion.comஎன்ற முகவரிக்கு அனுப்பவும். மின்னஞ்சலை அப்படியே அனுப்ப நினைவில் கொள்ளுங்கள், உள்ளடக்கங்களை நீக்கவோ நகலெடுத்து ஒட்டவோ கூடாது.
மேலும், மோசடி உரிமைகோரலைப் பதிவு செய்ய அல்லது அதிகாரிகளிடம் புகாரளிக்கதயங்க வேண்டாம்.
நீங்கள் சமூக ஊடகம், ஆன்லைன் மன்றம் அல்லது டேட்டிங் இணையதளத்தில் புதிய இணைப்பை உருவாக்கியுள்ளீர்கள், மேலும் பயண அல்லது பிற அவசரச் செலவுகளுக்கு பணம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுவது.
உதவிக்குறிப்பு: நீங்கள் நேரில் சந்தித்திராத எந்தவொரு நபருக்கும் ஒருபோதும் பணத்தை அனுப்பாதீர்கள்.
கடன், கிரெடிட் கார்டு, மானியம், முதலீடு அல்லது மரபு வழி பெற்ற பணத்திற்கான கட்டணத்தை முன்கூட்டியே செலுத்துமாறு உங்களிடம் கேட்பது.
உதவிக்குறிப்பு: தெரியாத அனுப்புநர்களிடமிருந்து வரும் மெசேஜ்களுக்குப் பதிலளிப்பதைத் தவிர்த்திடுங்கள்.
மோசடி செய்பவர்கள் போலியான பொருட்களை விளம்பரப்படுத்தப்பட்ட தளங்கள் அல்லது சந்தைகளில் விற்பனைக்கு அனுப்புவது மற்றும் வாங்குபவர்களிடம் பணம் அனுப்பச் சொல்லிக் கேட்பது.
இதற்குப் பலியாகிவிடாதீர்கள்!
உதவிக்குறிப்பு: நன்கு அறியப்பட்ட மற்றும் நம்பகமான இணையதளங்களிலிருந்து வாங்குங்கள்.
திடீரென்று அவசரநிலை தொடர்பாக உறவினரிடமிருந்து உங்களுக்கு அழைப்பு வந்து, நீங்கள் உடனடியாகப் பணம் அனுப்ப வேண்டிய நிலை!
உதவிக்குறிப்பு:
எதிர்வினையாற்றவோ, பதிலளிக்கவோ வேண்டாம்.
உண்மையில் உங்கள் குடும்பம் உறுப்பினருக்கு அவசரநிலை ஏற்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க நிறைய கேள்விகளைக் கேளுங்கள் மேலும் மற்றொரு குடும்ப உறுப்பினருடன் அவசரநிலையின் உண்மைத்தன்மையைக் கேட்டறிந்து கொள்ளுங்கள்.
ஒரு நபர் ஒரு நண்பர், குடும்ப உறுப்பினர் அல்லது நம்பகமான நபராக காட்டி உங்களை ஏமாற்றிப் பணம் அனுப்புமாறு கோருதல்.
உதவிக்குறிப்பு: உங்கள் தனிப்பட்ட தகவலைப் பாதுகாப்பாக வைத்திருங்கள்.
மோசடி செய்பவர்கள் மிகக் குறைந்த விலையில் வாடகைக்கு வீடுகள் இருப்பது போன்ற பட்டியலை வெளியிட்டு அவசரக் காலங்களைப் பயன்படுத்தி ஏமாற்றுகிறார்கள்.
உதவிக்குறிப்பு: சரிபார்க்கப்பட்ட வாடகை இணையதளங்களைப் பயன்படுத்தவும் மேலும் நம்பத்தகாத முறைகள் மூலம் பணத்தை அனுப்ப வேண்டாம்.
ஒரு ‘முதலாளி’ ‘வேலை தொடர்பான செலவுகளுக்கு’ ஒரு காசோலையை அனுப்பிவிட்டுப் பின்னர் பணத்தைத் திருப்பி அனுப்பச் சொல்வது.
காசோலை பவுன்ஸ் ஆகிவிடும், முழுத் தொகைக்கும் நீங்களே பொறுப்பேற்கும் நிலை உருவாகும்.
உதவிக்குறிப்பு: உங்களுக்குக் காசோலை அனுப்பப்பட்டிருந்தால், பணம் அனுப்பும் முன் அது பணமாக்கப்படும் வரை காத்திருக்கவும் (நிதி முன்கூட்டியே கிடைக்கலாம், ஆனால் காசோலைகள் பணமாக்கப்பட 10-14 நாட்கள் ஆகலாம்)
திடீரென ‘நீங்கள் வென்றதற்கு வாழ்த்துக்கள்!’ என்று அனுப்பப்படும் செய்தி.
மோசடி செய்பவர்கள் லாட்டரி மற்றும் ஸ்வீப்ஸ்டேக்ஸ் கனவுகளைக் கொண்டவர்களை இலக்கு வைக்கிறார்கள்.
உதவிக்குறிப்பு:
போலிகளைக் கண்டுபிடிக்க கற்றுக்கொள்ளுங்கள்.
முறையான போட்டிகள் உங்களை நேரடியாக அவர்களின் அதிகாரப்பூர்வ சேனல்கள் மூலம் தொடர்பு கொள்ளும்.
பணம் அனுப்பும் முன் எப்போதும் சரிபார்த்திடுங்கள்!
மோசடிகளுக்குப் பலியாக வேண்டாம்!
மோசடி செய்பவர்களைத் தவிர்ப்பதற்கும் மிஞ்சுவதற்கும் உதவிக்குறிப்புகளைப் பெறுங்கள்.
ஒன்றிணைந்து செயல்பட்டுபாதுகாப்பாகவும் புத்திசாலியாகவும் மாறும் விதத்தைக் கற்றுக்கொள்வோம், பகிர்ந்து கொள்வோம்.
மோசடி செய்பவர்கள் உங்கள் பணத்தைப் பெற முயற்சிக்கும் புதிய வழிகளைப் பற்றிய சமீபத்திய தகவல்களைப் பெற எங்களைப் பின்தொடருங்கள்.