மோசடி ஆதார மையம்

மோசடியிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்

நண்பர்களுக்கும், குடும்பத்திற்கும் பணம் அனுப்புவதற்கு Western Unio-ஐ மட்டும் பயன்படுத்துங்கள்.

 

நீங்கள் நேரில் சந்திக்காத ஒருவர் பணப் பரிமாற்றம் செய்யச் சொன்னால், அவர்களுக்குப் பதிலளிக்க வேண்டாம். கடினமான கடவுச்சொற்களைப் பயன்படுத்தவும் மற்றும் சீரற்ற இணைப்புகளைத் திறக்க வேண்டாம். உங்கள் தனிப்பட்ட தகவலை யாருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.

 

குறிப்பு: பணப்பரிமாற்றம் அனுப்பப்பட்ட பிறகு அல்லது டெபாசிட் செய்யப்பட்ட பிறகு, Western Union-ஆல் பணத்தைத் திரும்பப் பெற முடியாமல் போகலாம். பணம் அனுப்பப்படவில்லை அல்லது டெபாசிட் செய்யப்படவில்லை என்றால், மோசடி தொடர்பான கிளைமைப் பதிவு செய்வதன் மூலம்எங்களுக்குத் தெரிவிக்கலாம்.

 

Western Unionசேவைகளைப் பயன்படுத்தி ஒரு மோசடி செய்பவர் உங்களிடம் பணம் அனுப்பச் சொன்னால், அதைப் புகாரளிக்க எங்கள் மோசடி ஹாட்லைனை அழைத்திடுக.

 

திடீரென யாரேனும், பின்வரும் சூழ்நிலைகளில் ஏதேனும் ஒன்றுக்குப் பணம் அனுப்பச் சொன்னால் எச்சரிக்கையாக இருங்கள்:

அவசரநிலை

வைரஸ் எதிர்ப்புப் பாதுகாப்புக்காக

ஆன்லைன் கொள்முதல்

வாடகை சொத்துக்குப் பேமெண்ட் செலுத்துதல் அல்லது டெபாசிட்

மர்மமான ஷாப்பிங்

தொண்டு நன்கொடைக்காக

வரி செலுத்துவதற்காக

ஒரு கிரெடிட் கார்டு அல்லது கடன் கட்டணத்திற்காக

வெற்றிபெற்ற லாட்டரி அல்லது பரிசுகளைப் வெல்வதற்காக

வேலைவாய்ப்புக்காக

குடியேற்றத் தீர்மானங்கள்

டெலிமார்க்கெட்டிங் கோரிக்கைகள்

மோசடியை கவனிக்காமல் விடாதீர்கள்

நீங்கள் மோசடியைப் புகாரளிப்பதன் மூலம் வேறொருவர் மோசடிக்கு உள்ளாவதற்கான வாய்ப்புகளைக் குறைக்க உதவுகிறீர்கள். இது சட்ட அமலாக்க முகவர் மோசடிகளைக் கண்டறிந்து தடுக்க உதவுகிறது.

 

நீங்கள் மோசடிக்கு ஆளானதாகக் கருதினால், உள்ளூர் சட்ட அமலாக்க மற்றும் பிற நுகர்வோர் பாதுகாப்பு ஆதாரங்களைத் தொடர்பு கொள்ளுமாறு நாங்கள் உங்களை கேட்டுக் கொள்கிறோம்.

 

மோசடியைப் புகாரளிப்பது அவசியமாகும். இது நுகர்வோருக்கு விழிப்பூட்ட உதவுகிறது மற்றும் தற்போதைய மோசடிகள் பற்றிய தகவல்களை அதிகாரிகளுக்கு வழங்குகிறது. உலக அளவில் போலீஸ் அமைப்புகளுடன் நாங்கள் இணைந்து பணியாற்றும்போது, எங்களின் பணி சட்ட அமலாக்கம் அல்ல. எங்கள் சேவைகளைத் தவறாகப் பயன்படுத்துபவர்களின் விசாரணைகள் மற்றும் வழக்குகளை ஆதரிக்க ஏஜென்சிகளுடன் நாங்கள் இணைந்து பணியாற்றுகிறோம்.

தெரிந்து கொள்ள வேண்டியவை

ஒரு மோசடியை நான் எவ்வாறு அடையாளம் காண்பது?

மோசடிகள் எப்போதும் ஒரு குறிப்பிட்ட வழியில் நிகழாது. ஆனால் நீங்கள் கவனித்துத் தவிர்க்கவும் தடுக்கவும் கூடிய ஒரு வடிவத்தை மோசடியாளர்கள் பின்பற்றுகின்றனர்:

  • மோசடி செய்பவர் அவசரநிலை என்று பாசாங்கு செய்து பணம் அனுப்பச் சொல்வார். நீங்கள் நேரில் சந்தித்திராதவர்களுக்குப் பணப் பரிமாற்றம் செய்யாமல் இருப்பது நல்லது.
  • உங்கள் கடவுச்சொற்கள் யூகிக்க எளிதாக அல்லது அணுகக்கூடியதாக இருந்தால், மோசடி செய்பவர்கள் உங்கள் கணக்குகளை ஹேக் செய்யலாம். கடினமான கடவுச்சொற்களைப் பயன்படுத்தவும், அதை யாருடனும் பகிர வேண்டாம்.
  • மோசடி செய்பவர்கள் உங்கள் கவனத்தை ஈர்ப்பதற்காக மின்னஞ்சல்கள், சமூக ஊடகங்கள், குறுஞ்செய்திகள் மற்றும் தொலைபேசி அழைப்புகளைப் பயன்படுத்துகின்றனர். பொதுவாக, அவர்களின் மெசேஜ்கள் மின்னஞ்சல் முகவரியில் தவறான இலக்கணம் மற்றும் எழுத்துப்பிழைகளைக் கொண்டிருக்கும். நீங்கள் பதிலளிக்கும் முன், ஆராய்ச்சி செய்க.
நான் மோசடி தொடர்பான ஒரு கிளைமைப் பதிவு செய்தால் என்ன நடக்கும்?

நீங்கள் மோசடி தொடர்பான கிளைமைப் பதிவுசெய்தபிறகு, எங்கள் மோசடித் துறை உங்கள் கோரிக்கையை மதிப்பாய்வு செய்யும். தேவைப்பட்டால், மேலும் தகவலுக்கு எங்கள் குழு உங்களைத் தொடர்பு கொள்ளும். பரிமாற்ற நிலையைப் பொறுத்து, உங்கள் பரிமாற்றத்தை நாங்கள் திரும்பப் பெறலாம். உங்கள் கிளைமின் நிலை குறிப்பிடப்பட்டு எங்களிடமிருந்து மின்னஞ்சலைப் பெறுவீர்கள்.

மோசடி செய்பவர்களை Western Union-ஆல் கண்டறிந்து கொள்ள முடியாது என்பதை நினைவில் கொள்வது அவசியம். எங்கள் சேவைகளைப் பயன்படுத்தி மோசடி செய்யும் நபர்களின் மீதான விசாரணை மற்றும் வழக்குத் தொடர்தல் ஆகியவற்றுக்காக சட்ட அமலாக்க நிறுவனங்களுடன் நாங்கள் இணைந்து பணியாற்றுகிறோம்.

எனது பணப் பரிமாற்றத் தொகை திருப்பியளிக்கப்படுமா?

உங்கள் பரிமாற்றம் தவறான நபருக்கு அனுப்பப்பட்டதாக நீங்கள் கருதினால், அதை ரத்து செய்ய உடனடியாக எங்கள் வாடிக்கையாளர் சேவையை அழைத்திடுக. உங்கள் பரிமாற்றம் பிக் அப் செய்யப்படாவிட்டால், அனுப்பப்படாவிட்டால் அல்லது டெபாசிட் செய்யப்படாவிட்டால் என்றால், பரிமாற்றத்திற்கான முழுப் பணத்தையும் திரும்பப் பெறுவீர்கள்.

மோசடியைத் தடுக்க Western Unionஎன்ன நடவடிக்கை எடுக்கிறது?

பல்வேறு சேனல்கள் மூலம் மோசடியைப் பற்றி மக்களுக்குத் தெரியப்படுத்துகிறோம், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு உதவிக்குறிப்புகள் மற்றும் ஆதாரங்களை வழங்குகிறோம், மேலும் மோசடிக்கு எதிராகச் சிறப்பாகப் பாதுகாக்க உதவும் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்கிறோம். மோசடி புகாரளிக்கப்பட்டால், மோசடியை விசாரிக்கத் தேவையான அனைத்துத் தகவல்களையும் சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கு நாங்கள் ஆதரவளிப்போம்.

Western Union-ஐப் பயன்படுத்திப் பணப்பரிமாற்றம் செய்யும்படி சந்தேகத்திற்குரிய மின்னஞ்சலைப் பெற்றால் நான் என்ன செய்ய வேண்டும்?

அந்த மின்னஞ்சலை spoof@westernunion.comஎன்ற முகவரிக்கு அனுப்பி வையுங்கள். ஒரு மோசடி கிளைம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று இதற்கு அர்த்தமல்ல என்பதை நினைவில் கொள்க. மோசடியைப் புகாரளிக்க, நீங்கள் ஆன்லைனில் மோசடி கிளைமைப் பதிவு செய்ய வேண்டும் அல்லது எங்கள் மோசடி ஹாட்லைனைஅழைக்க வேண்டும்.

தெரிந்துகொள்ளுங்கள்.

சமீபத்திய மோசடிகள் மற்றும் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் விதம் பற்றித் தொடர்ந்து தெரிந்துகொள்ள சமூக ஊடகங்களில் எங்களைப் பின்தொடர்க. இணைந்து, நாம் #BeFraudSmart!-ஆக இருப்போம்

எங்கள் எச்சரிக்கைகள் மற்றும் புதுப்பிப்புகளைப் பின்பற்றுக