< மோசடி குறித்த விழிப்புணர்வு

கற்றல் மற்றும் அறிவுசார் மையம்

தகவலறிந்த நிலையில் இருங்கள்

கற்றல் மற்றும் விழிப்புணர்வு மூலம் பணப் பரிமாற்ற மோசடிகளினால் நுகர்வோர் ஏமாற்றப்படாமல் பாதுகாக்க Western Union உதவுகிறது.

எங்கள் எச்சரிக்கைகள் மற்றும் புதுப்பிப்புகளைப் பின்பற்றவும்

தெரிந்து கொள்ள வேண்டியவை

நீங்கள் எங்கள் கூட்டாளர்.
மோசடியைத் தடுக்க Western Unionகடுமையாக உழைக்கும் அதே வேளையில், மோசடியைத் தடுப்பது அனைவரின் பொறுப்பு என்றும் நாங்கள் நம்புகிறோம்.
உங்களின் சிறந்த தற்காப்பு என்பது விழிப்புடன் இருப்பது, நீங்கள் கற்பது மற்றும் எங்கள் தகவல் உதவிக்குறிப்புகளுடன் சிறந்த முடிவெடுத்து அதைப் பயன்படுத்துவதும் ஆகும்.
பாதிப்புக்கு உள்ளாகாதீர்கள்: தாமதிக்காமல், மோசடி முயற்சிகள் அல்லது மோசடி செய்பவரின் எச்சரிக்கை அறிகுறிகளைக் கண்டறியும் விதம் குறித்து அறிந்து கொள்ளுங்கள்.

பணப் பரிமாற்றத்தில் எப்போதும் செய்யக்கூடாதவை

பணப் பரிமாற்றச் சேவையைப் பயன்படுத்தும் போது நீங்கள் செய்யக்கூடாத எட்டு விஷயங்களை அறிந்து கொண்டு, ஏமாற்றப்படும் வாய்ப்புகளைக் குறைக்கவும்.

  1. நீங்கள் நேரில் சந்திக்காத எவருக்கும் பணம் அனுப்பாதீர்கள்.
  2. லாட்டரி அல்லது பரிசு வென்றவற்றுக்கு வரி அல்லது கட்டணம் செலுத்தப் பணத்தை அனுப்ப வேண்டாம்.
  3. உங்கள் பரிவர்த்தனையைப் பாதுகாக்கக் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கையாகச் சோதனைக் கேள்வியைப் பயன்படுத்த வேண்டாம்.
  4. உங்களுக்குத் தெரியாத நபர்கள் அல்லது வணிகங்களுக்கு உங்கள் வங்கித் தகவலை ஒருபோதும் வழங்காதீர்கள்.
  5. கடன் அல்லது கிரெடிட் கார்டு பெறுவதற்கு ஒருபோதும் முன்கூட்டியே பணம் அனுப்ப வேண்டாம்.
  6. அவசரநிலை என்றால், அதன் உண்மைத் தன்மையை ஆராயமல் ஒருபோதும் பணத்தை அனுப்ப வேண்டாம்.
  7. உங்கள் கணக்கிலிருந்து காசோலை மூலமாக அதிகாரப்பூர்வமாகப் பணம் செலுத்தப்படும் வரை ஒருபோதும் நிதியை அனுப்ப வேண்டாம் – இதற்குச் சில வாரங்கள் ஆகலாம்.
  8. ஆன்லைனில் பொருட்களை வாங்குவதற்குத் தனி நபருக்கு ஒருபோதும் பணம் அனுப்ப வேண்டாம்.

பல்வேறு மோசடி வகைகளைப் பற்றி மேலும் அறிக

பொது எச்சரிக்கை அறிகுறிகள்
  • உங்களை நேரில் சந்திக்க இயலவில்லை என சொல்வதற்கு மோசடி செய்பவர்கள் பல காரணங்களைக் கூறுவார்கள். தங்களுக்குப் பணம் தேவைப்படுவதற்கும் தாங்கள் எப்போதும் சிக்கலில் இருப்பதாகக் காட்டிக் கொள்வதற்கும் பல காரணங்களை அவர்கள் பட்டியலிடுவார்கள்.
  • உங்களைச் சந்திப்பதற்காக விமானம் ஏற செல்லும் போது விபத்தில் சிக்கிவிட்தாகவோ, அல்லது குடும்பத்தில் திடீரென ஒரு சோகமான நிகழ்வு நடந்துவிட்டதெனவோ அல்லது சுங்கத்தில் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவோ கூறி, அவசரமாகப் பணம் தேவைப்படுவதாக மோசடி செய்பவர்கள் கூறுவார்கள்.
  • மோசடி செய்பவர்கள் உங்களைப் பார்க்க விமான டிக்கெட்டுக்காக பணம் கேட்பார்கள் அல்லது சம்பள நாள் வரை நிலைமையைச் “சமாளிக்கப்” பணம் கேட்பார்கள்.
  • பொது இடத்தில் தங்களின் உடைமைகள் களவாடப்பட்டு விட்டதாவும் மேலும் பயணத்தின் போது அவர்களின் பணம், பாஸ்போர்ட் மற்றும் ID திருடப்பட்டதாகவும் கூறி சோசடி செய்பவர்கள் பணம் கேட்பார்கள்.
  • உங்களிடம் பணம் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள அல்லது வாங்கிய பொருட்கள் அல்லது சேவைகளைப் பெறும் வரை எஸ்க்ரோவாகச் செயல்பட உங்கள் நண்பர் அல்லது குடும்ப உறுப்பினரின் பெயரில் பணத்தை அனுப்புமாறு மோசடி செய்பவர்கள் கூறுவார்கள்.
  • மோசடி செய்பவர்கள் தாங்கள் விபத்தில் சிக்கியதாகவும், மருத்துவமனையில் இருப்பதாகவும், அவர்கள் வீடு திரும்புமுன் மருத்துவக் கட்டணம் முழுமையாகச் செலுத்தப்பட வேண்டும் என்றும் கூறுவார்கள்.
மின்னஞ்சல்கள் மற்றும் ஃபிஷிங்

சைபர் குற்றவாளிகளுக்குக் கடவுச்சொற்கள் மற்றும் IDகள் அதிக மதிப்பு வாய்ந்தவையாகும். மோசடி செய்பவர்கள் சந்தேகப்படாத நபர்களிடமிருந்து தகவல்களைத் திருடுவதற்கு சீரற்ற முறையில் பல மின்னஞ்சல் முகவரிகளுக்கு ஃபிஷிங் மின்னஞ்சல்களை அனுப்புவது ஒரு எளிய வழியாகும். பின்வரும்ம எவ்வகைப்பட்டதாக இருந்தாலும், அது ஒருவேளை ஃபிஷிங் மின்னஞ்சலாக இருக்கலாம்:

  • எழுத்துப்பிழைகள் மற்றும் தவறான இலக்கணத்துடன் மின்னஞ்சல் மோசமாக எழுதப்பட்டிருக்கும் அல்லது நன்கு அறியப்பட்ட நிறுவனத்தின் பெயர் தவறாக எழுதப்பட்டிருக்கும்.
  • உங்கள் பெயர் “பெறுநர்” வரிசையில் இருக்காது. இந்த மின்னஞ்சல் ஆயிரக்கணக்கானோருக்கு அனுப்பப்பட்டிருக்கலாம்.
  • அனுப்புநரின் மின்னஞ்சல் முகவரி சந்தேகத்திற்குரியதாக இருக்கலாம்; ஒரு நன்கு அறியப்பட்ட நிறுவனத்தின் பெயர் அல்லது அரசாங்க அமைப்பின் பெயர் தவறாக எழுதப்பட்டிருக்கலாம்.
  • மின்னஞ்சலில் உங்கள் பெயர் இருக்காது. நீங்கள் கணக்கு வைத்திருக்கும் எந்த நிதி நிறுவனத்திற்கும் உங்கள் பெயர் தெரிந்திருக்கும். “அன்புள்ள வாடிக்கையாளர்,” “சம்பந்தப்பட்டவரின் பார்வைக்கு” அல்லது “ஹலோ” என்று தொடங்கும் மின்னஞ்சல் ஒரு மோசடியாக இருக்கலாம்.
  • URL போலியானதாக இருக்கலாம். “இங்கே கிளிக் செய்யவும்” அல்லது “இப்போதே நடவடிக்கை எடுங்கள்” என்ற இணைப்பின் மேல் உங்கள் மவுஸ் கர்சரை வைக்கவும். அதில் முறையான நிறுவன இணையதளத்திற்குப் பதிலாக விசித்திரமான URLஐப் பார்த்தால், கிளிக் செய்ய வேண்டாம்.
  • உங்கள் கணக்கில் பாதுகாப்பு மீறல் இருப்பதாகவும், மின்னஞ்சலில் பரிந்துரைக்கப்பட்ட நடவடிக்கையை நீங்கள் மேற்கொள்ளவில்லை என்றால், உங்கள் கணக்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் என்றும் அதில் கூறப்பட்டிருக்கலாம்.
  • மின்னஞ்சல் உங்கள் தனிப்பட்ட, கிரெடிட் கார்டு அல்லது ஆன்லைன் கணக்குத் தகவலைக் கேட்கும் அல்லது அதைக் கேட்கும் இணையதளத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும். சட்டபூர்வமான நிறுவனங்கள் பொதுவாக அதைச் செய்வதில்லை.

 

நீங்கள் சந்தேகத்திற்குரிய ஒரு மின்னஞ்சலைப் பெற்றால்:

  • அதைத் திறக்க வேண்டாம்; உடனடியாக அதை நீக்கவும்.
  • அனுப்புநரிடமிருந்து வரும் மின்னஞ்சல்களிளிருந்து “குழு விலகக்” கோரும் – அல்லது அதில் இணைக்கப்பட்டிருக்கும் எந்தக் கோப்பையும் திறக்கக் கோரும் எந்த இணைப்பையும் பின்தொடர வேண்டாம்.
  • உங்கள் ID, கடவுச்சொல் அல்லது தனிப்பட்ட தகவலைக் கோரும் மின்னஞ்சலை Western Union உங்களுக்கு அனுப்பாது. ஒரு மின்னஞ்சல் Western Union-லிருந்து வந்ததா இல்லையா என்பது உங்களுக்கு உறுதியாகத் தெரியாவிட்டால், எந்த இணைப்புகளையும் திறக்க வேண்டாம், எந்த இணைப்புகளையும் கிளிக் செய்ய வேண்டாம் அல்லது கடவுச்சொற்கள் அல்லது பயனர் IDகளை வழங்க வேண்டாம்.

அந்த மின்னஞ்சலை spoof@westernunion.com என்ற முகவரிக்கு அனுப்பிவிட்டு, நீக்கிவிடவும்.